டிக்டாக் பிரபலமான 16 வயது இளம்பெண் தற்கொலை: மிரட்டப்பட்டதாக புகார்

டெல்லியில் லட்சக்கணக்கான ஃபாலோயர்களை கொண்ட டிக்டாக் பிரபலம் சியா கக்கர் தற்கொலை செய்துகொண்டது அவரது ரசிகர்களுக்கிடையே கடும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

டிக்டாக்கில் லட்சக்கணக்கான ரசிகர்களுடன் மிகப் பிரபலமாக இருப்பவர் 16 வயது சியா கக்கர். டிக்டாக் மட்டுமின்றி இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல சமூக வலைதளங்களில் இவர் பிரபலம். டெல்லியை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவியான இவரது நடனத்திற்காக இவரை டிக்டாக்கில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் டிக்டாக் பிரபலம் சியா கக்கர் திடீரென தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். கடந்த மூன்று மாதங்களாக பள்ளி விடுமுறை என்பதால் வீட்டிலேயே இருந்து, விதவிதமான நடனங்களை டிக்டாக் மூலம் பதிவு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் அவரை தொலைபேசியில் சிலர் மிரட்டியதாகவும், இதனால் அவர் அதிர்ச்சி அடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து டெல்லி காவல்துறையினர் சியாவின் செல்போனை கைப்பற்றி விசாரித்து வருகின்றார். அதுமட்டுமின்றி சியாவின் நெருங்கிய நண்பர்களையும் விசாரணை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்

Leave a Reply