கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுவர கூடாது மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ.

தமிழகத்தில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகள் பாமர மக்கள் எளிதில் அணுகும் வண்ணம் பல ஆண்டுகளாக வேளாண் சார்ந்த தொழில்கள், விவசாயக் கடன், வேளாண் காப்பீடு போன்றவற்றை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் பல கோடி ஏழை விவசாயிகளுக்கு மாநில அரசின் சிறப்பு திட்டங்கள் நேரடியாக சென்றடைந்தன. இதில் மக்கள் அனைவரும் எளிதில் கடன் பெறும் வண்ணம் எளிமையாக்கப்பட்ட நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது.

இதனை முடக்கும் வண்ணம் மத்திய அரசு ஜூன் 24-ந் தேதி அவசரம் அவசரமாக, கூட்டுறவு வங்கிகளை மத்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. இது ஏழை மக்களின் பணத்தை கபளகரம் செய்து பெரும் முதலாளிகளுக்கு தாரை வார்க்கும் முயற்சி ஆகும். மேலும், மாநில சுயாட்சி தத்துவத்திற்கு எதிரானது. எனவே மத்திய அரசு அவசர சட்டத்தை மறுபரிசீலனை செய்து திரும்ப பெறவேண்டும். கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரக்கூடாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply