ஈரான் நாட்டிலிருந்து குமரி மாவட்டத்திற்கு வருகைதரும் மீனவர்களை தங்கவைக்கப்படவுள்ள தோவாளை சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியில் தளவாய் சுந்தரம் பார்வையிட்டு ஆலோசனை மேற்கொண்டார்

மாண்புமிகு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி திரு.ந.தளவாய் சுந்தரம் அவர்கள், ஈரான் நாட்டிலிருந்து சொந்த ஊரான குமரி மாவட்டத்திற்கு வருகைதரும் மீனவர்களை, தங்க வைக்கப்படவுள்ள ஏழு முகாம்களில் ஒன்றான, தோவாளை சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியில் தங்க வைத்து, நிறுவனதனிமைப்படுத்தி,அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படுவது குறித்து, இன்று (27.06.2020) நேரில் சென்று பார்வையிட்டு, கல்லூரி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்கள்.

உடன் மாவட்ட ஆவின் பெருந்தலைவர் திரு.எஸ்.ஏ.அசோகள், தமிழ்நாடு மாநில மீன்வள கூட்டுறவு இணையப்பெருந்தலைவர்திரு.எம்.சேவியர் மனோகரன், மாவட்ட கூட்டுறவு ஒன்றியப்பெருந்தலைவர் திரு.எஸ்.கிருஷ்ணகுமார், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்தலைவர் திரு.எஸ்.அழகேசன்,கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி மைய இயக்குநர் பங்குதந்தை அருட்திரு.எஸ்.எஸ்டீபன், கன்னியாகுமரி மாவட்ட சி.எஸ்.ஐ. பேராய செயலாளர் அருட்திரு.பிஜூ நிஷித்பால்,கவிஞர் சதாசிவம், திரு.சுகுமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply