தோவாளையில் இளநிலை மின்பொறியாளர் அலுவலகம் புதிய கட்டிடத்தை தளவாய் சுந்தரம் அவர்கள் துவங்கி வைத்தார்

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையில் புதிய கட்டடத்தில், இளநிலை மின்பொறியாளர் அலுவலகம் இன்று முதல் இயங்கவுள்ளது. இதனை மாண்புமிகு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி திரு.ந.தளவாய் சுந்தரம் அவர்கள் இன்று (26.06.2020) குத்துவிளக்கேற்றி, துவக்கி வைத்தார்கள்.

தோவாளை, இளநிலை மின்பொறியாளர் அலுவலகத்தின்கீழ், தேரேகால்புதூர், திருப்பதிசாரம், அனந்தபத்மநாபபுரம், சோழபுரம், கண்ணன்புதூர், மாதவலாயம், சண்முகபுரம், செண்பகராமன்புதூர், தோவாளை, பீமநகரி, விசுவாசபுரம், வெள்ளமடம், நாக்கால்மடம் ஆகிய பகுதிகளைச்சார்ந்த சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளது. முந்தைய இளநிலை மின்பொறியாளர் அலுவலகமானது, தோவாளையில் பழைய, வாடகை கட்டடத்தில் இயங்கி வந்தது.

தற்போது, அனைத்து விதமான வசதிகளுடன், அரசுக்கு சொந்தமான புதிய கட்டடத்தில் இளநிலை மின்பொறியாளர் அலுவலகமானது, இன்று முதல் இயங்குகிறது. இதனை தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி திரு.ந.தளவாய் சுந்தரம் அவர்கள் இன்று (26.06.2020) குத்துவிளக்கேற்றி, துவக்கி வைத்தார்கள்.

தோவாளை ஊராட்சியிலிருந்து, மின்சார வாரியத்திற்கு செலுத்தவேண்டிய ரூ.5.22 இலட்சம் நிலுவைத் தொகையை செலுத்தி, அதற்கான இரசீதினை, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி திரு.ந.தளவாய் சுந்தரம் அவர்கள் பெற்று, தோவாளை ஊராட்சி மன்றத்தலைவர் திரு.அ.நெடுஞ்செழியன் அவர்களிடம் வழங்கினார்கள்.

நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆவின் பெருந்தலைவர் திரு.எஸ்.ஏ.அசோகன், மாவட்ட கூட்டுறவு ஒன்றியப் பெருந்தலைவர் திரு.எஸ்.கிருஷ்ணகுமார், மாவட்ட மின் மேற்பார்வை பொறியாளர் திருமதி.ஜி.குருவம்மாள், செயற்பொறியாளர் திரு.சி.ராஜசேகர், ஊராட்சி ஒன்றியத்தலைவர்கள் திருமதி.இ.சாந்தினி பகவதியப்பன் (தோவாளை), திரு.எஸ்.அழகேசன் (அகஸ்தீஸ்வரம்) , மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திரு.மா.பரமேஸ்வரன், தோவாளை ஊராட்சி மன்ற துணைத்தலைவர் திரு.என்.எம்.தாணு, உதவி செயற்பொறியாளர் திரு.சசிக்குமார், உதவி பொறியாளர் (தோவாளை)திரு.ஜெ.ராஜூ, அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள்
பலர் கலந்து கொண்டார்கள்.

Leave a Reply