சாத்தான்குளம் உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் உதவி! – ஸ்டாலின் அறிவிப்பு

கோவில்பட்டி கிளைச்சிறையில் உயிரிழந்த சாத்தான்குளத்தைச் சார்ந்த தந்தை, மகன் குடும்பத்துக்கு தி.மு.க சார்பில் ரூ.25 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தை, மகன் மரணத்தில் மர்மம் உள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்ற மதுரைக் கிளையும் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. போலீஸ் தாக்குதலில் உயிரிழந்ததாக பொது மக்கள், உறவினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக அரசும் அறிவித்தது.


இந்த நிலையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்திற்கு தி.முக சார்பில் ரூ.25 லட்சம் நிதி உதவி செய்யப்படும். நீதிக்கான போராட்டத்தில் சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு தி.மு.க துணை நிற்கும்” என்று கூறியுள்ளார். உயிரிழந்த ஜெபராஜின் மனைவி செல்வராணிக்கு மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply