பிரபல திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா அதிபர் தற்கொலை..!

பிரபலமான திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா கடை அதிபர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வெளி வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை தந்திருக்கிறது.நெல்லை டவுனில் உலக புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா கடை உள்ளது.  இந்த கடையின் உரிமையாளர் ஹரிசிங். இவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந் நிலையில் தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பயத்தில் இருந்த உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

உலக புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நெல்லையில் மட்டுமல்லாமல், தமிழகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மற்றொரு உரிமையாளருக்கு தற்போது தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply