நாகர்கோவிலில் சாக்கு கடையில் திடீர் தீவிபத்து

நாகர்கோவில் கோட்டார் கவிமணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி எதிரே ஒரு சாக்கு மொத்தக்கடை உள்ளது. இங்கு ஏராளமான சாக்குகள் இருப்பு வைக்கப்பட்டு, வியாபாரிகளுக்கு விற்பனை செய்வது வழக்கம். நேற்று காலை சுமார் 9 மணி அளவில் சாக்கு கடையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதுகுறித்து அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் நிலைய தீயணைப்பு அதிகாரி துரை தலைமையிலான தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மேலும் தீ பரவாமல் தடுத்து அணைத்தனர். இருப்பினும் அந்த சாக்கு கடை அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர் மற்றும் பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Leave a Reply