நாகர்கோவிலில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 84 ஆக விலை உயர்வு

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகளை தொடர்ச்சியாக உயர்த்தி வருகிறது. அந்த வகையில் 19 வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகள் உயர்ந்துள்ளன.

நாகர்கோவிலில் ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்று ரூ.83.84க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.83.98க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாகர்கோவிலில் ஒரு லிட்டர் டீசல் ரூ.77.98க்கு நேற்று விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.78.09க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 19 நாட்களில் மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.8.66ம், டீசல் ரூ.10.63 ம் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Leave a Reply