கொரோனா தொற்று அதிகரித்ததன் காரணமே திமுக தான் – முதல்வர் பழனிசாமி தாக்கு!

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து கோவையில் ஆலோசனை மேற்கொண்ட பிறகு முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், எந்த மாநிலத்தில் இருக்கும் எதிர்க்கட்சி தலைவரும் இந்த இக்கட்டான சூழலில் ஸ்டாலின் போல அரசியலுக்காகச் செயல்பட மாட்டார்கள் என்றும் தொற்று அதிகரித்ததன் காரணமே திமுக தான் என்று குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து, ஸ்டாலினின் உத்தரவை ஏற்று நிவாரண பொருட்கள் வழங்கியதால் தான் திமுக எம்.எல்.ஏ உயிரிழந்தார் என்றும் மருத்துவ நிபுணர்களின் அறிவுரைகளை ஏற்று நடந்திருந்தால் ஒரு எம்.எல்.ஏவை இழக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது என்றும் அதிகாரிகள் மூலம் நிவாரண பொருட்கள் கொடுத்திருந்தால் அசம்பாவிதம் நடந்திருக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறினார். இதனையடுத்து அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மிகப்பெரிய நாடுகளே கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரத் திணறி வருவதாகக் கூறிய அவர், தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக இல்லை என்று இறப்பு விகிதம் குறைவாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், 90 நாட்கள் ஊரடங்கு போடப்பட்டதால் தான்கொரோனா கட்டுக்குள் இருக்கிறது என்றும் சாத்தான்குள விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவு செயல்படுத்தப்படும் என்றும் வியாபாரிகளிடமும் பொதுமக்களிடமும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என்று போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறினார்.

Leave a Reply