அரைநிர்வாண உடலில் சிறுவர்களை வைத்து சித்திரம் – ரெஹனா பாத்திமா மீது வழக்கு.!

கேரளாவின் பெண் சமூக ஆர்வலர் ரெஹனா பாத்திமா.கொச்சியைச் சேர்ந்த இஸ்லாமியரான ரெஹனா பாத்திமா என்ற பெண் இருமுடியுடன் கோயிலுக்குள் செல்ல முயன்றார்.இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவர், மாடலாகவும், சமூக செயற்பாட்டாளராகவும் செயல்பட்டு வருகிறார்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள பரூக் கல்லூரியில், கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பேராசிரியர் ஒருவர் பெண்களின் மார்பகங்களை தர்பூசணியுடன் ஒப்பிட்டுப் பேசினார். அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ‘எனது உடல், எனது உரிமை’ என்ற கோஷத்துடன், தர்பூசணியுடன் மேலாடை அணியாத தனது அரைநிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் தற்போது அரைநிர்வாணக் கோலத்தில் படுத்திருக்க அவர் உடலில் குழந்தைகள் ஓவியம் வரையும் வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வைரவாகி வருகிறது.இதையடுத்து சிறுவர்களை ஆபாச வீடியோவுக்கு பயன்படுத்தியதாக ரெஹனா பாத்திமா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

போக்சோ சட்டத்தின் கீழ் பத்தினம் திட்டா போலீசார் வழக்குப் பதிவு செய்யவும் ஆலோசித்து வருகின்றனர . ஆனால் இந்த வீடியோவை கலைநயத்துடன் பார்க்க வேண்டும் என்று ரெஹனா பாத்திமா தெரிவித்துள்ளார். சபரிமலையில் தடையை மீறி நுழைய முயன்று போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்திய ரெஹனா பாத்திமா, தற்போது வெளியான வீடியோ மூலம் சட்டச்சிக்கலுக்கு ஆளாகியுள்ளார்.

Leave a Reply