முதல்வர் உயிருக்கு அச்சுறுத்தல் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து இடங்களுக்கும் சர்வ சாதாரணமாக சென்று வரக்கூடியவர். மக்களுடன் தொடர்பில் உள்ளவர். இதனால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவருக்கு இசஸ் பிளஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் சேலம், கோவை, திருச்சி மாவட்டங்களில் நடக்கும் பல்வேறு திட்டப்பணிகளை ஆய்வு செய்ய முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக செல்ல உள்ளார். இதனால் அவர் பயணம் மேற்கொள்ள உள்ள 11 மாவட்டங்களில் பாதுகாப்பை பலப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. நேரடி ஆய்வு மேற்கொள்ள உள்ள சேலம், திருச்சி, கோவை நகரங்களில் கூடுதல் பாதுகாப்பை செய்ய மாநகர காவல் ஆணையர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply