ரூ.4 லட்சம் செலவில் புதிய கலையரங்கம் ஆஸ்டின் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்

கன்னியாகுமரி அருகே கொட்டாரம் வடக்கு தெருவில் விஸ்வகர்மா சமுதாயத்துக்கு உட்பட்ட முத்தாரம்மன் கோவில் வளாகத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.4 லட்சம் செலவில் புதிய கலையரங்கம் கட்டப்பட்டது. இதன் திறப்புவிழா நடந்தது. ஊர் தலைவர் ஆறுமுகம் ஆசாரி தலைமை தாங்கினார். முன்னாள் ஊர்தலைவர் ராஜகோபால், ஊர் செயலாளர் முத்து, பொருளாளர் மகாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆஸ்டின் எம்.எல்.ஏ. கலையரங்கத்தை திறந்து வைத்தார்

துணை செயலாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்று பேசினார். ஆஸ்டின் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கலையரங்கத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் தாமரைபாரதி, கொட்டாரம் பேரூர் செயலாளர் வைகுண்டபெருமாள், கொட்டாரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் யோபு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊர் செயற்குழு உறுப்பினர் முத்துசாமி நன்றி கூறினார்.

Leave a Reply