தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி காணொலியில் நாளை அவசர ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று ஒரேநாளில் தமிழகத்தில் 2,710பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 62,087ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 37பேர் உயிரிழந்தனர். 7பேர் தனியார் மருத்துவமனையிலும், 30 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 794ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துவது, முழு முடக்கம் உள்ளிட்டவை பற்றி நாளை காலை 10 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி காணொலியில் அவசர ஆலோசனை நடத்தவுள்ளார்.

முன்னதாக கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 12 நாட்களுக்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply