தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படத்துடன் கனெக்சன் ஆகும் ‘விக்ரம் 60’

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சியான் விக்ரம் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளார் என்ற அதிகாரபூர்வ செய்தியை ஏற்கனவே பார்த்தோம். அதுமட்டுமின்றி இந்த படத்தில் விக்ரமுடன் அவரது மகன் துருவ் விக்ரம் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. லலித்குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் குறித்த முக்கிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா என்பவர் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை ஸ்ரேயாஸ் கிருஷ்ணா தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்

ஏற்கனவே இவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ’ஜகமே தந்திரம்’ என்ற திரைப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் இவரது ஒளிப்பதிவு திறமையை பார்த்த கார்த்திக் சுப்புராஜ் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply