குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய பா.ஜனதா பொதுசெயலாளராக, மணவாளக்குறிச்சியை சேர்ந்த ஐயப்பன் நியமனம்

கன்னியாகுமரி மாவட்டம் பா.ஜனதா கட்சியின் குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய பொதுசெயலாளராக, மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்த ஐயப்பன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய பா.ஜனதா கட்சி பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஐயப்பன், அதற்கு ஒப்புதல் வழங்கிய, குமரி மாவட்ட பா.ஜனதா கட்சி தலைவர் சி.தர்மராஜ், கோட்ட அமைப்பு செயலாளர் கிருஷ்ணன், மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் சுப.நாகராஜன், மாநில அமைப்பு பொதுசெயலாளர் கேசவவிநாயகம், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மாநில தலைவர் எல்.முருகன் ஆகியோருக்கு நன்றியினை தெரிவித்தார்.

மேலும், குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய பொதுசெயலாளராக நியமனம் செய்த மேற்கு ஒன்றிய தலைவர் சி.பி.ராஜ் மற்றும் பரிந்துரை வழங்கிய மாவட்ட துணைத் தலைவர்கள் பா.ரமேஷ், பிரம்மா ஆகியோருக்கும் தன்னுடைய மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொண்டார்.

குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய பொதுசெயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட ஐயப்பனுக்கு மணவாளக்குறிச்சி பா.ஜனதா கட்சியினரும், பொதுமக்களும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

Leave a Reply