குமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுடன் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆலோசனை

மாண்புமிகு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி திரு.ந.தளவாய் சுந்தரம் அவர்கள்,கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பிரசாந்த் மு.வடநேரே, அவர்களுடன், மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் மேற்கொள்வது குறித்தும்.

ஈரான் நாட்டிலிருந்து வரும் மீனவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து, அவர்களை தங்கவைத்து தேவையான உணவுகள் வழங்குவது குறித்தும், வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களிருந்து வருகை தருபவர்களை கொரோனா பரிசோதனை செய்து, நோய் பரவாமல் தடுப்பது குறித்தும், கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்தும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்கள்.

உடன் மாவட்ட ஆவின் பெருந்தலைவர் திரு.எஸ்.ஏ.அசோகன், மாவட்ட அரசு ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு விற்பனை சங்கத்தலைவர் திரு.டி.ஜாண்தங்கம், மாவட்ட கூட்டுறவு ஒன்றியப் பெருந்தலைவர் திரு.எஸ்.கிருஷ்ணகுமார் ஆகியோர் உள்ளார்கள்.

Leave a Reply