கடம்படிவிளாகம் கிராமத்தில் தட்டுப்பாடு இன்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை

தோவாளை யூனியன், திடல் பஞ்சாயத்துக்கு உள்பட்ட கடம்படிவிளாகம் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் பஞ்சாயத்து அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். இந்த பிரச்சினையை மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரத்தின் கவனத்திற்கு எடுத்து சென்றார்.

தளவாய் சுந்தரம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு, குடிநீர் பிரச்சினை குறித்து, ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். அதன்படி ஊராட்சி நிதியில் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பில் பழுதடைந்துள்ள குடிநீர் குழாய்களை சரிசெய்து, தேவையான இடங்களில் புதிய குடிநீர் குழாய்கள் அமைத்து பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், தோவாளை யூனியன் தலைவி சாந்தினி பகவதியப்பன், பஞ்சாயத்து தலைவி ராஜ லட்சுமி, யூனியன் கவுன்சிலர் அய்யப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர் இங்கர்சால், உதவி பெறியாளர் கவிதா, பணிப்பார்வையாளர் மேகலை மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply