எல்லையில் தொடரும் சீனாவின் தொல்லை…! முக்கிய ஆபரேஷனை தொடங்கிய இந்தியா

கிழக்கு லடாக்கில் சீனா, நேபாள எல்லைகளில் ஆளில்லா விமான கண்காணிப்பை இந்தியா அதிகரித்துள்ளது.கல்வான் பள்ளத்தாக்கில் ஜூன் 15ம் தேதி இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். அதன் எதிரொலியாக, எல்லைப் பகுதிகளிலும், சீன ஊடுருவல் ஏதும் இருக்கிறதா என்பது தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சீனா அத்துமீறி தாக்குதல் நடத்தினால் பதிலடி நடத்த இந்திய ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. மேற்கு, நடுத்தர அல்லது கிழக்குத் துறைகளில்  அத்துமீறல்களைத் தடுக்க இந்தியா தனது சிறப்பு படைகளை   நிறுத்தியுள்ளது.

கிழக்கு லடாக்கில் 4 இடங்களில் சீனா, நேபாள எல்லைகளில் ஆளில்லா விமான  கண்காணிப்பை இந்தியா அதிகரித்துள்ளது. ராணுவம் மற்றும் தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பு ஆகியவை இப்பகுதியில் அதிக கண்காணிப்பு ஆள் இல்லா விமானங்களை நிறுத்தி வைக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளன.

Leave a Reply