வேகமெடுக்கும் கொரோனா : புதுச்சேரியில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகம் எடுத்து வரும் நிலையில் புதுச்சேரி மாநிலத்திலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 338 ஆக உயர்ந்துள்ளது. இதில் 131 பேர் குணமடைந்த நிலையில் 7 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக புதுச்சேரியில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. அதில் முக கவசம் அணியாமல் வெளியே வந்தால் ரூ. 200 அபராதம் என்றும் கடைகள் மற்றும் மது கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் உணவு விடுதிகளில் மதியம் 2 மணி வரை மட்டுமே அமர்ந்து சாப்பிடலாம் என்றும் இரவு 9 மணி வரை பார்சல் வழங்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. புதுச்சேரி கடற்கரையில் 10 நாட்களுக்கு யாரும் செல்ல அனுமதிக்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இங்கு நடைப்பயிற்சி செய்யலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில் முறையான சமூக இடைவெளியை பின்பற்றாமல் மக்கள் அலட்சியம் காட்டியதால் இந்த அனுமதி தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தொழிற்சாலைகள் வழக்கம்போல் செயல்பட முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். பெரிய மார்க்கெட்டில் செயல்பட்டுவந்த காய்கறி அங்காடி இன்று முதல் புதிய பேருந்து நிலையத்தில் செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply