விஜய் பிறந்த நாளில் அஜித்தை டிரெண்ட் செய்யும் ரசிகர்கள்

தளபதி விஜய்யின் பிறந்தநாளை இன்று அவருடைய ரசிகர்கள் மிகச்சிறப்பாக சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர் என்பது தெரிந்ததே. மேலும் விஜய்யின் பிறந்த நாள் குறித்த ஹேஷ்டேக்குகள் இன்று அதிகாலை 12 மணியில் இருந்தே சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் விஜய் பிறந்த நாளில் திடீரென அஜித் ரசிகர்கள் களத்தில் இறங்கி அஜித் குறித்த ஒரு ஷேஷ்டேக் ஒன்றை டிரெண்டாக்கி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #NonpareilThalaAJITH என்ற ஹேஷ்டேக்கை அஜித் ரசிகர்க்ள் வைரலாக்கியதால் தற்போது இந்த ஹேஷ்டேக் மில்லியன் கணக்கான டுவிட்டுக்களை பெற்று முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

விஜய் பிறந்த நாளில் திடீரென அஜித் ரசிகர்கள் ஒன்றை உருவாக்கி அதனை ட்ரெண்டில் முதலிடத்திற்கு கொண்டு வந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .மேலும் இந்த ஹேஷ்டேக்கில் உள்ள ‘Nonpareil’ என்பதற்கு தமிழில் ’தனி ஒருவன்’ ’ஈடு இணையற்றவர்’ என்பது பொருள் என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே கடந்த ஆண்டும் விஜய் பிறந்தநாளன்று அன்று, ‘என்றும் தல அஜித்’ என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அதனை முதலிடத்துக்கு அஜித் ரசிகர்கள் கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply