பெட்ரோல், டீசல் விலையை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும் :வசந்தகுமார் எம்.பி.

நாகர்கோவில் அருகே பள்ளம் கடற்கரை கிராமத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வசந்தகுமார் எம்.பி. கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்திருக்கும் போதிலும், இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.83-க்கு மேல் விற்கப்படுகிறது.

தமிழக அரசு ஒரு வரியையும், மத்திய அரசு ஒரு வரியையும் போடுகிறது. இதனால் சாதாரண மக்கள், நடுத்தர வர்க்கத்தினர் இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் போட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும்.

ஏழைகள் வாங்கிய கடன் தொகையை வங்கிகள் மூன்று மாதம் வசூல் செய்யக்கூடாது என மத்திய அரசு அறிவித்தது. ஆனால், இந்த அறிவிப்பை வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் கண்டு கொள்ளாமல் ஏழைகளுக்கு நெருக்கடி கொடுத்து வருவதை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தடுக்க வேண்டும்.

இவ்வாறு வசந்தகுமார் எம்.பி. கூறினார். அப்போது, தி.மு.க. எம்.எல்.ஏ. ஆஸ்டின் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Leave a Reply