பா.ஜனதா பிரமுகர்கள் மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்

சுசீந்திரம் பேரூராட்சிக்குட்பட்ட மணவிளை காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த பா.ஜனதா நிர்வாகிகள் சுரேஷ்குமார், ராஜேஷ், அகில பாரத இந்து மகாசபா ஒன்றிய செயலாளர் மணிகண்டன் உள்பட 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பா.ஜனதா கட்சியில் இருந்து விலகி மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. முன்னிலையில், தி.மு.க.வில் இணைந்தனர்.

நிகழ்ச்சிக்கு அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் தாமரை பாரதி தலைமை தாங்கினார். ஆஸ்டின் எம்.எல்.ஏ., சுசீந்திரம் பேரூர் செயலாளர் மாடசாமி, மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பா.ஜனதா கட்சியில் இருந்து விலகி மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. முன்னிலையில், தி.மு.க.வில் இணைந்தனர்

இதில் முன்னாள் மாநில தொண்டரணி துணை செயலாளர் வக்கீல் பால ஜனாதிபதி, மாவட்ட துணை செயலாளர் முத்துசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் சாய்ராம், இளைஞரணி அமைப்பாளர் வக்கீல் சிவராஜ், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் உதயகுமார், தென்தாமரைகுளம் பேரூர் செயலாளர் புலியூர் காமராஜ், மாவட்ட பிரதிநிதி சுப்பையா, சுசீந்திரம் பேரூர் அவைத்தலைவர் சரத் சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply