நான் சினிமாவுக்கு வர விஜய் தான் காரணம்: நடிகர்-அரசியல்வாதி டுவீட்

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 22 என்றாலே விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். தளபதி விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதியில் அதிகாலை 12 மணிமுதல் வெகு சிறப்பாக ரசிகர்கள் கொண்டாடி வருவது வருவார்கள் என்பது தெரிந்ததே.

விஜய்யின் பிறந்தநாளை விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி கோலிவுட் திரையுலகின் அனைத்து பிரபலங்களும் தங்களுடைய சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருவார்கள் என்பது தெரிந்ததே. அந்த வகையில் நடிகரும், தயாரிப்பாளரும் அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் ’நான் சினிமாவுக்கு வர முக்கிய காரணமாக இருந்தவரே விஜய்தான்’ என்று டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த டுவிட்டை போது வைரலாகி வருகிறது.

உதயநிதி ஸ்டாலின் தனது டுவீட்டில் மேலும் கூறியிருப்பதாவது: நான் சினிமாவுக்கு வர முக்கிய காரணமாக இருந்தவர். திரையில் வெகுஜன நாயகர், நேரில் நல்ல நண்பர்… என்று இயல்பான, அழகான நட்பு. அளவான பேச்சும், நிறையப் பாராட்டுமாக எளிமையாகப் பழகும் அண்ணன் தளபதி விஜய் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.

Leave a Reply