சுசீந்திரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் நிவாரண உதவி

மாண்புமிகு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி திரு.ந.தளவாய் சுந்தரம் அவர்கள், சுசீந்திரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில், கொரோனா நிவாரண உதவியாக,400 ஏழை, எளிய பொதுமக்களுக்கு தலா 5 கிலோ அரிசியினை, அருள்மிகு தாணுமாலையசுவாமி திருக்கோவில் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில்
வழங்கினார்கள். உடன் மாவட்ட ஆவின் பெருந்தலைவர் திரு.எஸ்.ஏ-அசோகன், முன்னாள் அமைச்சர் திரு.கே.டி.பச்சைமால்,அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்தலைவர் திரு.எஸ்.அமுகேசன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் முனைவர் ஈ.நீலப்பெருமாள்,மாநில இலக்கிய அணி இணைச்செயலாளர் கவிஞர் எஸ்.சதாசிவம், கிழக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் திரு.சுகுமாரன், திரு.நாகசாமி,சுசீந்திரம் பேரூர் கழக செயலாளர் திரு.ஐ.குமார் ஆகியோர் உள்ளார்கள்.

Leave a Reply