குமரி மீனவர்களுக்கு பஞ்ச காலம் நிவாரண நிதி கிடைக்க வலியுறுத்தி ராஜேஷ்குமார் எம்எல்ஏ மீன்துறை அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்

குமரி மாவட்டத்தில் மீனவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பஞ்ச கால நிவாரண நிதி மிகப்பெரிய அளவில் முறையீடு செய்யப்பட்டு இருக்கிறது. எனவே இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி  அனைத்து மீனவர்களுக் கும் பஞ்ச காலம் நிவாரண நிதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என் பதை வலியுறுத்தி ராஜேஷ்குமார் எம்எல்ஏ தலைமையில் இன்று காலை வடசேரியில் உள்ள மீன்துறை அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.

இதில் ஏராளமான மீனவ சங்க பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். இது குறித்து ராஜேஷ் குமார் எம் எல் ஏ நிருபர்களிடம் கூறுகையில் குமரி மாவட்டத்தில் 50 க்கும் மேற் பட்ட மீனவ கிராமங்கள்  உள்ளன. இவர்களுக்கு பஞ்ச கால நிவாரணமாக  ரூ 5000, நலவாரியத்தின்  மூலம் ரூ 2 ஆயிரமும் வழங்கப்படும். ஆனால் அதிகாரிகள் இதை முறை யாக வழங்குவதில்லை. தேவையில்லாத காரணங்களைக் கூறி மீனவர்களை  அலைக்கழிப்பு செய்து இந்த நிதியை கையாடல் செய்கிறார்கள் .

எனவே பாதிக்கப்பட்ட மீனவர்கள் அனைவருக்கும் உரிய முறையில் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுக்கள்  அனுப்பியும் நேரடியாக வலியுறுத்தியும் எந்த வித நடவடிக்கையும் இல்லை. எனவே இது தொடர்பாக உள்ளிருப்பு போராட்டம் 

நடத்தப்போவதாக அறிவித்து இருந்தேன். அதன்படி இன்று அலுவலகத்திற்கு வந்தால் காலை11 மணி வரை எந்த அதிகாரியும் வர வில்லை. மீனவர்களை இந்த அரசு ஏமாற்றியுள்ளது பல்வேறு உதவிகளை செய்கிறோம் என்று வெளிப்படையாக அறிவித்து விட்டு ஆனால் மீனவர்களுக்கு வழங்க வேண்டிய பண பலன்களை எதுவும் வழங்காமல் ஏமாற்றி வருகிறார்கள்.

இதற்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உரிய பதில் அளிக்கவேண்டும் .சம்பந்தப்பட்ட கிராமங்களில் விசாரணை நடத்தி அனைத்து மீனவர்களுக்கும் உரிய முறையில் பஞ்ச கால நிவாரண நிதி மற்றும் நலவாரிய நிதி வழங்கப்பட வேண்டும் என்றார்.

Leave a Reply