கொரோனா தொற்றை தடுக்க யோகா பயிற்சி சிறந்தது முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அவரது அலுவலகத்தில் யோகாசனம் செய்தார்.

பின்னர் பேசிய அவர், கொரோனாவில் இருந்து மீண்டு வர யோகா செய்ய வேண்டும். கொரோணா பரவல் உள்ள நிலையில் நாட்டு மக்கள் அனைவரும் யோகா கற்று கொள்ள வேண்டும் என பாரத பிரதமர் மோடி அவர்கள் தெரிவித்துள்ளார். உடலின் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்க வேண்டும் என்றும் இன்றைய வாழ்க்கை முறை நமக்கு அதிக மன அழுத்தத்தை உண்டாக்குவதாக உள்ளது என்றும் மன அழுத்தத்தால் உடலின் நோய் எதிர்ப்பாற்றல் குறையும்.

எனவே மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும் தற்போதைய சூழலில் கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கும்யோகா பயிற்சி சிறந்த முன் தடுப்பு நடவடிக்கையாகும் என்றும் கடந்த 2014-ம்ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் பிரதமர் மோடி தனது உரையில் சர்வதேச யோகா தினத்தை முன்மொழிந்தார்.

ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி சர்வ தேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. கொரோணா பரவல் காரணமாக இன்று பொது இடங்களில் யோகா நடத்த சூழல் இல்லாததால் பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே யோகா பயிற்சிகள் மேற் கொண்டனர் கொரோனாவை வீழ்த்த யோகா சிறந்த வழிமுறையை தருகிறதுஎன்றும் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.

Leave a Reply