உடல்நலக்குறைவால் அமைச்சர் சி.வி சண்முகம் மருத்துவமனையில் அனுமதி!

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு இன்று காலை திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால், 10:20 மணி அளவில் இதயவியல் சிகிச்சை பிரிவின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் சி.வி சண்முகத்துக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், கொரோனா இருக்கிறதா என்ற தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

Leave a Reply