“இறைவன் மீது பாரத்தைச் சுமத்த முயல்கிறார் பழனிசாமி”.. மு.க ஸ்டாலின் விமர்சனம்

தமிழகத்தின் தலைநகரான சென்னையை கொரோனா வைரஸ் புரட்டிப் போட்டுள்ளது. பிழைப்பு தேடி சென்னை வந்தவர்கள் எல்லாம், உயிர் பிழைக்கச் சொந்த ஊர்களை நோக்கிப் படையெடுத்து விட்டனர். சென்னை வேளச்சேரியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி, கொரோனாவில் இருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்ள மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் கொரோனா எப்போது ஒழியும் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, கொரோனா எப்போது ஒழியும் என்று கடவுளுக்கு மட்டும் தான் தெரியும் என்று கூறினார்.

இந்த நிலையில் முதல்வர் கடவுள் மீது பழி போட முயற்சிப்பதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், “#CoronaVirus பரவலுக்கு பலர் மீதும் பழிபோட்டு வந்த முதல்வர் பழனிசாமி, தற்போது இறைவன் மீது பாரத்தைச் சுமத்த முயல்கிறார். கொரோனா மறைவதுதான் நற்பெயர் தருமே தவிர; அதனை மறைப்பதல்ல! இனியேனும் மக்கள் பிரதிநிதிகள், மக்களின் ஆலோசனைகளைக் கேட்டு #COVID19 இல்லாத தமிழகத்தை உருவாக்க முயலுங்கள்!” என்று குறிப்பிட்டு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply