வருங்கால தலைவர் விஜய்: தளபதி ரசிகர்கள் ஒட்டும் போஸ்டரால் சர்ச்சை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், தென்னிந்திய சினிமாவில் பாக்ஸ் ஆஃபிஸ் ஹீரோவாக திகழ்ந்து வருகிறார் தளபதி விஜய். தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கும் நடிகர் விஜய் வரும் 22 ஆம் தேதி தனது 49 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி அவரது ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் மதுரை மற்றும் கும்பகோணம் பகுதிகளில் விஜய் மக்கள் இயக்கத்தினர் ஒட்டியுள்ள போஸ்டரால் சர்ச்சை வெடித்துள்ளது.

மதுரையில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டரில்

மதுரையில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டரில், ‘வாங்கய்யா வாத்தியாரய்யா’ என குறிப்பிட்டு கூறப்பட்டிருப்பதாவது..

“கேரளா போன்ற நேர்மையான அரசாகவும்
ஆந்திரா போன்ற மக்களுக்கான அரசாகவும்
டெல்லியை போன்று ஊழலற்ற அரசாகவும்
தமிழ்நாடு அமைய வாங்கய்யா வாத்தியார் ஐயா
வரவேற்க வந்தோம் ஐயா. ஏழைகள் உங்களை நம்பி எதிர்பார்த்து நின்றோம் ஐயா..” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கும்பகோணத்தில்

இதேபோல் கும்பகோணத்தில்,” நடிகர் விஜய் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி போல வெற்றி பெற்று தமிழகத்தை ஆட்சி செய்ய வருவார்” போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் ”நாளைய தமிழகத்தை ஆட்சி செய்யப்போகும் சர்க்கார்” என்ற வாசகமும் அந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளது.

இதுபோல பல போஸ்டர்களைப் தமிழ்நாடு முழுவதுமே பல இடங்களில் விஜய் ரசிகர்கள் ஒட்டிவருகின்றனர். அதேபோல் விஜய் ரசிகர்கள் ஒட்டும் போஸ்டரால் சர்ச்சை ஏற்படுவதும் புதிதல்ல.. இப்படி விஜய்யை அரசியலுக்கு அழைக்கும் விதமாக ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினாலும், அரசியலுக்கு வருவது பற்றி விஜய் எந்தவித கருத்துக்களையும் தெரிவித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply