கேரளாவில் தவிக்கும் தயாரிப்பாளரின் குடும்பத்திற்கு உதவுங்கள்.. இருமாநில முதல்வர்களிடமும் கோரிக்கை வைத்த நடிகர் ராகவா லாரன்ஸ்.

படகோட்டி, பணத்தோட்டம், கலங்கரை விளக்கம், சந்திரோதயம், குடியிருந்த கோயில், பாலும் பழமும், பாதகாணிக்கை,i பாகப்பிரிவினை, பஞ்சவர்ணகிளி போன்ற பல வெற்றிப் படங்களை தயாரித்தவர் மறைந்த பழம்பெரும் தயாரிப்பாளர் G.N.வேலுமணி. புரட்சி தலைவr மற்றும் புரட்சி தலைவியின் பெரும் அபிமானம் பெற்றவர் G.N.வேலுமணியின், பேத்தி புவனா சரவணனும், அவரது தயாரும் கேரளாவில் அவதிப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, நடிகர் ராகவா லாரன்ஸுக்கு கடிதம் எழுயுள்ள மறைந்த G.N.வேலுமணியின் பேத்தி புவனா , “ தற்சமயம் நானும் என் தாயாரும் கேரள மாநிலத்தில் அவதிப்பட்டு வருகிறோம் எனவும், எங்களது ஊரான கோபிசெட்டிபாளையத்திற்கு செல்லவும், தங்குவதற்கு ஒரு வீடும் பெற உதவி செய்யுமாறும்” கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து, உடனடியாக நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மறைந்த தயாரிப்பாளர் G.N.வேலுமணி அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் யாருடைய உதவியும் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்கள் இருவரும் சொந்த ஊரான கோபிச்செட்டிப்பாளையம் செல்ல, தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதேபோல் அவர்கள் தமிழகம் வந்து சேர தேவையான உதவிகளை செய்து தருமாறு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். மேலும் மற்ற தயாரிப்பாளர்களுக் அவர்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply