குமரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து குமரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் நெய்யூர் தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் நரேந்திர தேவ் தலைமை தாங்கினார்.

பிரின்ஸ் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், ஜெயகுமார், அருள் ஆன்டனி, ஜெரால்டு கென்னடி, ஆன்றோ அலெக்ஸ், முருகன், ஸ்டார்வின், சர்மிளா ஏஞ்சல், மாணவர் காங்கிரஸ் அபிஜித், பேராசிரியர் சுந்தர் ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.

இதுபோல், காங்கிரஸ் முன்னாள் மாவட்ட செயலாளர் பிரேம்குமார் தலைமையில் திங்கள்நகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் முன்னாள் மாவட்ட தலைவர் ராபட்புரூஸ், கிறைஸ்ட் ஜெனித், யூசுப்கான், வின்ஸ், ராஜன், பிரகாஷ் தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply