குமரியில் லடாக் பகுதியில் நடந்த போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

லடாக் பகுதியில் நடந்த போரில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் பழனி உள்பட 20 ராணுவ வீரர்களுக்கு கன்னியாகுமரி நகர ஆர்.எஸ்.எஸ். சார்பில் மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி முக்கடல் சங்கமம் கடற்கரையில் நேற்று நடந்தது.

இதில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களும், பொதுமக்களும், வியாபாரிகளும் கலந்து கொண்டு வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் உருவப்படங்களுக்கு மலர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து இரங்கல் கூட்டம் நடந்தது.

இந்த நிகழ்ச்சிகளுக்கு கன்னியாகுமரி நகர ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர் முருகன் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் முத்துசாமி, மாவட்ட ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர் கதிரேசன், ஜனார்த்தனன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply