30,000 எம்.ஏ.ஹெச் பேட்டரி திறன் கொண்ட புதிய சியோமி பவர் பேங்க் சாதனம் அறிமுகம்

30,000 எம்.ஏ.ஹெச் பேட்டரி திறன் கொண்ட புதிய சியோமி பவர் பேங்க் சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சியோமி நிறுவனம் அதன் எம்.ஐ பவர் பேங்க் 3 குயிக் சார்ஜ் எடிஷன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் பேட்டரி திறன் 30,000 எம்.ஏ.ஹெச் ஆகும். இதனால் 10 முறை ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்ய முடியும். மேலும் ஒரேநேரத்தில் மூன்று சாதனங்களை சார்ஜ் செய்ய முடியும்.

18வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் யு.எஸ்.பி டைப் சி போர்ட் அம்சங்கள் இந்த பவர் பேங்க் சாதனத்தில் இடம்பெற்றுள்ளது. குறைந்த சக்தி தேவைப்படும் சாதனங்களை சார்ஜ் செய்வதற்கு ஏற்ப குறைந்த மின்னோட்ட பயன்முறையையும் சியோமி இந்த பவர் பேங்க் சாதனத்தில் வழங்கியுள்ளது. இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.1800 என இதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply