வாட்ஸ்அப் மொபைல் செயலியில் வரவிருக்கும் புதிய அம்சங்கள்

எதிர்வரும் நாட்களில் பல பயனர்களை சென்றடையக் கூடிய பல புதிய அம்சங்கள் வாட்ஸ்அப்பில் இடம்பெற உள்ளது.

அதில் ஒன்று மேம்படுத்தப்பட்ட தேடல் அம்சம் ஆகும். இது ஒரு குறிப்பிட்ட தேதியின் செய்திகளைத் தேட பயனர்களுக்கு வழிவகை செய்கிறது.

மறுவடிவமைப்பு செய்யப்பட்ட மெமரி பகுதி மூலம் அளவில் பெரிதாகவும், பார்வர்டு செய்திகளையும் பார்க்க முடியும்.

அதேபோல, நட்சத்திரமிட்ட செய்திகளைத் தவிர அனைத்து செய்திகளையும் டெலீட் செய்யும் அம்சம் இடம்பெற உள்ளது.

மேலும் ஷேர்சாட் வீடியோ ஒருங்கிணைப்பு, டார்க் மோடு அம்சத்தில் பபிள்ஸ், ஐபோன் கிளையன்ட் மூலம் இணையத்தில் படங்களைத் தேடும் திறன் ஆகியவை இடம்பெற உள்ளது.

புதிய தேடல் அம்சம்:

வாட்ஸ்அப் செயலியில் தேதிவாரியாக தேடல் அம்சம் இடம்பெற உள்ளது. இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட தேதியின் செய்தியைத் தேடுவது பயனர்களுக்கு எளிதாக இருக்கும். இதன் மூலமாக பிற தேதிகளின் முடிவுகளை தவிர்த்து குறிப்பிட்ட தேதியில் வந்த செய்திகளை மட்டும் பார்க்க முடியும்.

மறுவடிவமைப்பு ஸ்டோரேஜ் அம்சம்:

வாட்ஸ்அப் செயலியில் மெமரி பயன்பாடு பகுதி மறுவடிவமைப்பு செய்யப்பட உள்ளது. இதன் மூலம் அளவில் பெரிதான கோப்புகளை பார்க்க முடியும். அதேபோல பார்வர்டு செய்த செய்திகளை தனியாக பார்க்கும் வகையில் அம்சம் ஒன்று புதிதாக இடம்பெற உள்ளது.

புதிய டெலீட் அம்சம்:

வாட்ஸ்அப் செயலியில் நட்சத்திரமிட்ட செய்திகளைத் தவிர மற்ற அனைத்து செய்திகளையும் ஒரே கிளிக்கில் டெலீட் செய்யும் அம்சம் இடம்பெற உள்ளது. அந்த பகுதிக்கு கீழே நட்சத்திரமிட்ட செய்திகள் உட்பட அனைத்து செய்திகளையும் டெலீட் செய்யும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஷேர்சாட் வீடியோ ஒருங்கிணைப்பு:

ஷேர்சாட் வீடியோக்களை வாட்ஸ்அப்பில் தங்குதடையின்றி பார்க்கும் வகையில் ஷேர்சாட் வீடியோ ஒருங்கிணைப்பு அம்சம் இடம்பெற உள்ளது. அதாவது பிக்சர்-இன்-பிக்சர் மோடு மூலமாக ஷேர்சாட் வீடியோக்களை வாட்ஸ்அப் செயலியிலேயே எளிதாக பார்க்க முடியும்.

படத்தை தேடும் அம்சம்:

ஐபோன் பயனர்கள் வாட்ஸ்அப் செயலியில் இருந்து இணையத்தில் படங்களைத் தேடும் அம்சம் இடம்பெற உள்ளது. வாட்ஸ்அப் சாட்டிங்கில் வந்த படங்களை இணையத்தில் தேடுவதற்கு உதவும் வகையில் இந்த அம்சம் இடம்பெற உள்ளது. இந்த அம்சம் மூலம் போலி செய்தி புழக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.

மெசேஜ் பபிள்ஸ் நிறம்:

வாட்ஸ்அப் செயலியை டார்க்மோடு அம்சத்தில் பயன்படுத்தும்போது நாம் அனுப்பிய மெசெஜின் பபிள்ஸ் நிறம் புதியதாக மாற்றப்பட உள்ளது. இதன் மூலம் மெசேஜ் படிக்கும் பயனர்களின் கண்களை உறுத்தாத வகையில் இருக்கும்.

Leave a Reply