திமுக தலைமை ஒரு நல்ல எம்.எல்.ஏ வை கொன்றுவிட்டது : பொன். ராதாகிருஷ்ணன் தாக்கு!

அணை கட்டும்போது நரபலி கொடுப்பது போன்று, ஆட்சிக்கு வர திமுக ஒரு நல்ல சட்டமன்ற உறுப்பினரை கொன்றுவிட்டார்கள் என்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்ததியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது, ” கொரானா காலகட்டத்தில் தமிழக அரசு இந்த தடை உத்தரவு காலங்களில் மதுக்கடைகளை திறந்து இருக்கக்கூடாது, மின் கட்டண உயர்வால் பொதுமக்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர் எனவே அதிக அளவில் மின் கட்டணம் வசூலிப்பது சரியான நடவடிக்கை அல்ல என்று கூறினார்.

மேலும் அணை கட்டும்போது நரபலி கொடுப்பது போன்று, ஆட்சிக்கு வர திமுக ஒரு நல்ல சட்டமன்ற உறுப்பினரை கொன்றுவிட்டார்கள். வெளியே செல்லாதீர்கள் என்று கூறி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திய திமுக, அவர்களின் எம்.எல்.ஏ.அன்பழகனை களத்தில் இறக்கிவிட்டது யார்? ஏன் என திமுகவிற்கு கேளிவி எழுப்பி உள்ளார்.

Leave a Reply