தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்டு பிளான்கள்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வித,விதமான ப்ரீபெய்டு பிளான்களை அறிமுகம் செய்துள்ளது. பல பயனர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிவதை முன்னிட்டு இந்த கொரோனா பொதுமுடக்க காலத்தில் நிறைய ப்ரீபெய்டு பிளான்களை ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஜியோ நிறுவனம் தினமும் 1.5 ஜிபி டேட்டா பலன் வழங்கும் 4 ப்ரீபெய்டு பிளான்களை பற்றி இந்த கட்டுரையில் காண்போம்!

ரிலையன்ஸ் ஜியோ மூன்று வருடாந்திர ப்ரீபெய்டு பிளான்களை அமலில் வைத்துள்ளது. அதில் ஒன்று ரூ.2121 பிளான் ஆகும். இந்த பிளானில் தினமும் 1.5 ஜிபி டேட்டா பலன் வழங்கப்படுகிறது. இந்த பிளானின் வேலிடிட்டி 336 நாட்கள் ஆகும். மொத்தம் 504 ஜிபி டேட்டா பலன் வழங்கப்படுகிறது. இந்த பிளானில் ஜியோ டூ ஜியோ இலவச அழைப்புகள், மற்ற நெட்வொர்க்குகளுக்கு 12 ஆயிரம் நிமிடங்கள் வாய்ஸ்கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ், ஜியோ ஆப்ஸ் சந்தா ஆகிய பலன்களும் வழங்கப்படுகிறது.

ஜியோ நிறுவனம் ரூ.555 என்ற காலாண்டு ப்ரீபெய்டு பிளான் அறிமுகம் செய்துள்ளது. இந்த பிளானில் தினமும் 1.5 ஜிபி டேட்டா பலன் வழங்கப்படுகிறது. இந்த பிளானின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். மொத்தம் 126 ஜிபி டேட்டா பலன் வழங்கப்படுகிறது. இந்த பிளானில் ஜியோ டூ ஜியோ இலவச அழைப்புகள், மற்ற நெட்வொர்க்குகளுக்கு 3 ஆயிரம் நிமிடங்கள் வாய்ஸ்கால், ஜியோ ஆப்ஸ் சந்தா ஆகிய பலன்களும் வழங்கப்படுகிறது.

அதபோல மற்றொரு காலாண்டு ப்ரீபெய்டு பிளான் ரூ.399 ஆகும். இந்த பிளானில் தினமும் 1.5 ஜிபி டேட்டா பலன் வழங்கப்படுகிறது. இந்த பிளானின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். மொத்தம் 84 ஜிபி டேட்டா பலன் வழங்கப்படுகிறது. இந்த பிளானில் ஜியோ டூ ஜியோ இலவச அழைப்புகள், தினமும் 100 எஸ்.எம்.எஸ், மற்ற நெட்வொர்க்குகளுக்கு 2 ஆயிரம் நிமிடங்கள் வாய்ஸ்கால், ஜியோ ஆப்ஸ் சந்தா ஆகிய பலன்களும் வழங்கப்படுகிறது.

ஜியோ நிறுவனம் குறைந்த விலையில் தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கும் ப்ரீபெய்டு பிளான் ரூ.199 ஆகும். இந்த பிளானின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். மொத்தம் 84 ஜிபி டேட்டா பலன் வழங்கப்படுகிறது. இந்த பிளானில் ஜியோ டூ ஜியோ இலவச அழைப்புகள், தினமும் 100 எஸ்.எம்.எஸ், மற்ற நெட்வொர்க்குகளுக்கு ஆயிரம் நிமிடங்கள் வாய்ஸ்கால், ஜியோ ஆப்ஸ் சந்தா ஆகிய பலன்களும் வழங்கப்படுகிறது.

Leave a Reply