கொரோனா சோதனைக்காக இந்தியாவின் முதல் மொபைல் ஆய்வகம் – மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் அறிமுகம்

கொரோனா சோதனைக்காக இந்தியாவின் முதல் மொபைல் ஆய்வகத்தை மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் அறிமுகம் செய்தார்.

இந்தியாவின் கிராமப்புற மற்றும் அணுக முடியாத பகுதிகளில் கொரோனா சோதனை செய்ய இந்தியாவின் முதல் மொபைல் ஆய்வகத்தை மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இன்று அறிமுகம் செய்தார்.

இதன் மூலம் நாளொன்றுக்கு 25 ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகள், காசநோய்களுக்கான சோதனைகள் மற்றும் 300 எலிசா சோதனைகள், எச்.ஐ.வி சோதனைகள் நடத்தப்பட உள்ளன. இந்தியாவில் தற்போது கொரோனா சோதனைக்காக 953 ஆய்வகங்கள் உள்ளன. இதில் 699 அரசு ஆய்வகங்கள் உள்ளடங்கும் என அமைச்சர் ஹர்ஷவர்தன் குறிப்பிட்டார்.

Leave a Reply