கொரோனாவை ஸ்டாலின் கொண்டு வந்து அன்பழகனிடம் கொடுத்தாரா? வசந்தகுமார் எம்.பி கண்டனம்

திமுக தலைமை எம்எல்ஏ அன்பழகனை கொன்று விட்டது என்று பொன் ராதாகிருஷ்ணன் கூறுவது அரசியல் நாகரிகமற்ற செயல் என கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியின் ஐம்பதாவது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுவதை ஒட்டி தமிழக காங்கிரஸ் கமிட்டியின் அறிவுறுத்தலின்படி விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் நடுவதற்கு இலவசமாக மரக்கன்றுகளை கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் வசந்தகுமார் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி முன்னிலையில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்தார்.

தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசும்பொழுது தமிழகத்தில் கொரோனா தாக்குதல் துவங்கிய காலகட்டத்தில் தமிழக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றில் போதிய உபகரணங்கள் பயன்படுத்தி நோய் தடுப்பு நடவடிக்கைகளை உரிய முறையில் மேற்கொள்ளாததால் தமிழகத்தில் அதிக அளவில் கொரோனா பரவுவதற்கு காரணம் என குற்றம்சாட்டினார்.

திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் மரணத்தைக் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் திமுக தலைமை தான் அன்பழகனை கொன்றுவிட்டது என்று கூறியுள்ளார் . அன்பழகனுக்கு கொரோனாவை ஸ்டாலின் கொண்டு வந்து கொடுத்தாரா? இதுபோன்று ஒரு அரசியல் தலைமை ஒரு எம்எல்ஏவை கொன்று விட்டது என்று பேசுவது அரசியல் நாகரிகமற்ற செயல் இது போன்று பேசுவதை கண்டிக்கத்தக்கது என அவர் தெரிவித்தார்.

Leave a Reply