குவாட் ரியர் கேமரா – எச்.டி.சி டிசையர் 20 ப்ரோ மற்றும் எச்.டி.சி யு20 5 ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

குவாட் ரியர் கேமரா கொண்ட எச்.டி.சி டிசையர் 20 ப்ரோ மற்றும் எச்.டி.சி யு20 5ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

தைவானில் எச்.டி.சி டிசையர் 20 ப்ரோ மற்றும் எச்.டி.சி யு20 5ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. சாம்சங், ஆப்பிள், சியோமி மற்றும் ஹூவாய் ஆகிய நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக இவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. குவாட் ரியர் கேமரா மற்றும் ஹோல் பன்ச் டிஸ்பிளே ஆகியவை இந்த மாடல்களில் இடம்பெற்றுள்ளன. ஸ்மோக்கி பிளாக் மற்றும் பிரெட்டி ப்ளூ ஆகிய நிறங்களில் எச்.டி.சி டிசையர் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. அதேபோல கிரீன் மற்றும் சில்வர் ஆகிய நிறங்களில் எச்.டி.சி யு20 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எச்.டி.சி டிசையர் 20 ப்ரோ சிறப்பம்சங்களாக டுயல் நானோ சிம், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், 6.8 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசசர், 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி, 48 எம்.பி ரியர் கேமரா, டுயல் எல்.இ.டி பிளாஷ், 32 எம்.பி செல்பி கேமரா, 5000 எம்.ஏ.ஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் இதர கனெக்டிவிட்டி அம்சங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

எச்.டி.சி யு20 5ஜி சிறப்பம்சங்களாக டுயல் நானோ சிம், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், 6.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 665 பிராசசர், 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி, 48 எம்.பி ரியர் கேமரா, டுயல் எல்.இ.டி பிளாஷ், 25 எம்.பி செல்பி கேமரா, 5000 எம்.ஏ.ஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் இதர கனெக்டிவிட்டி அம்சங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

Leave a Reply