இளைஞர் காங்கிரஸ் சார்பில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. பங்கேற்பு

சீனா தாக்கியதில் வீர மரணம் அடைந்த 20 ராணுவ வீரர்களுக்கு கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில் மாங்கரை பகுதியில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு கிள்ளியூர் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜோபின் சிறில் தலைமை தாங்கினார்.

குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., கிள்ளியூர் வட்டார தலைவர் டென்னிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் டைட்டஸ், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் லெனின்குமார், குமரேசன், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் எல்பின், அனிஸ்டன், ராஜேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே போல் குளச்சல் போலீஸ் நிலையத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ் சாஸ்திரி தலைமையில் நடந்தது. அப்போது அங்கு வைக்கப்பட்டு இருந்த ராணுவ வீரர்களின் உருவப்படத்துக்கு அவர் அஞ்சலி செலுத்தினார். இதில் சப்-இன்ஸ்பெக்டர் சுஜீத் ஆனந்த் மற்றும் மகளிர் போலீசார், போக்குவரத்து போலீசாரும் கலந்து கொண்டார்கள்.

கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் அந்தோணியம்மாள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மகேஷ், ஜெயகுமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெஸ்டின் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Leave a Reply