தக்கலையில் சிபிஐஎம் ஆர்ப்பாட்டம்

கொரோனா ஊரடங்கால் நெருக்கடிகளிலிருந்து ஏழை மக்களை பாதுகாத்திட மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி சிபிஐஎம் சார்பில் 22 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மின்கட்டன கணக்கீட்டில் குளறுபடி செய்து கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும். சிறுகுறு விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்களின் வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். ஏழை நடுத்தர குடும்பங்களுக்கு மத்திய அரசு ரூ.7000, மாநில அரசு ரூ. 5000 ரொக்கமாக வழங்க வலியுறுத்தி சிபிஐஎம் சார்பில் 22 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மணலிசந்திப்பு, மேட்டுக்கடை, கல்குளம் தாலுகா அலுவலகம் முன்பு, கீழக்கல்குறிச்சி, முத்தலக்குறிச்சி, புலியூர்குறிச்சி, தென்கரை, பத்மநாபபுரம், முட்டைக்காடு, பெருஞ்சிலம்பு, மணலிக்கரை, செம்பருத்திவிளை, மேக்காமண்டபம், அழகியமண்டபம், திருவிதாங்கோடு, கோழிப்போர்விளை, திக்கணங்கோடு, முளகுமூடு, சாமியார்மடம், இரவிபுதூர்கடை, பள்ளியாடி, கண்டன்விளை ஆகிய தக்கலை வட்டார ஊர்களில், வட்டார செயலாளர் சுஜா ஜாஸ்பின் வழிகாட்டுதலில் போராட்டம் நடைபெற்றது.

திருவிதாங்கோட்டில் நடந்த போராட்டத்திற்கு தேவசகாயம் தலைமையில் ராஜன் முன்னிலை வகித்து போராட்டத்தை துவக்கி வைத்தார்.

மணலியில் நடந்த போராட்டத்திற்கு ஜாண்ராஜ் தலைமை தாங்கினார். சந்திரகலா முன்னிலை வகித்தார். இதில் கிருஷ்ணன்பிள்ளை, சாதிக்அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேட்டுக்கடை நல்லதம்பி, கல்குளம் தாலுகா அலுவலகம் முன்பு ஸ்டெல்லா ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் அரங்கசாமி, ஸ்மைல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் மின்கட்டணத்தில் ஏற்பட்ட குளறுபடிகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். நேற்று முன்தினம் 15-ம் தேதி இரணியலில் நாகராஜன் தலைமையில் போராட்டம் நடந்தது.

Leave a Reply