அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று அசுர வேகத்தில் பரவி வருகிறது. இன்று புதிதாக 2,174பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50,193 ஆக அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் இப்படியே நீடித்தால் ஜூலை மாத இறுதிக்குள் தமிழகத்தில் 2 லட்சம் பேர் பாதிப்பார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உதவியாளர் ரவிச்சந்திரன் கொரோனா தொற்று உறுதியானதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த ஞாயிறு அன்று சென்னையில் கோவிட் -19 தொற்று பரிசோதனைக்கு கொடுத்திருந்தர். இந்நிலையில் சென்னையில் இருந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன் திருச்சி வந்து கொண்டிருந்தார்.

அப்போது ரவிச்சந்திரனை தொடர்பு கொண்ட சுகாதாரத்துறையினர் தகவல் கொடுத்து உடனடியாக திருச்சியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து தற்போது அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Leave a Reply